தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’.
கடந்த
2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்
பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக
நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து
விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய் நடிப்பார்
என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க
உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ்
தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.
மேலும், நடிகர்
விஜய்யின் 65-வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக
இருந்தது. ஆனால் கதை விஜய்க்கு திருப்தியாக இல்லாததால் முருகதாஸ்
இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
