நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்
வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த
படத்தின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை
தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழித்
திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் அமிதாப்பச்சனுடன் இணைந்து
‘பிங்க்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார் .