துப்பாக்கி 2ஆம் பாகத்தில் விஜய் நடிக்கவில்லை; ஷாக் ஆன ரசிகர்கள்!

 


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’.

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார். 

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் துப்பாக்கி 2-ம் பாகத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

மேலும், நடிகர் விஜய்யின் 65-வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை விஜய்க்கு திருப்தியாக இல்லாததால் முருகதாஸ் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

சினிமாவை விட்டு விலகுகிறேன்; பிரபல தமிழ் நடிகையின் மகள் எடுத்த அதிரடி முடிவு!

‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை கார்த்திகா. இதைத் தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்ததார். அதன் பின் சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.


நடிகை கார்த்திகா கடைசியாக வா டீல் படத்தில் நடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. 

இதனால் 2017-ல் ஆரம்ப் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டி.வி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அத்திப்பட்டி போல் ‘அட்ரஸ்’சை தொலைத்த ஒரு கிராமத்தை பற்றிய கதையில் நடிக்கும் அதர்வா!

 


குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் ராஜமோகன். இதையடுத்து, ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை இயக்கினார்.

தற்போது இவர், ‘அட்ரஸ்’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இது குறித்து பேசிய அவர், "1956-ம் ஆண்டில் இந்தியாவை மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது, தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு தனது ‘அட்ரஸ்’சை தொலைத்த ஒரு கிராமத்தை பற்றிய கதை இது. 

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் நட்புக்காக, புரட்சிகரமான காளி என்ற இளைஞர் வேடத்தில் அதர்வா நடித்துள்ளார். இவருக்கு ஒரு பாடல் மற்றும் 2 சண்டை காட்சிகளும் உள்ளன. 

ஜோடியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். இவர்களுடன் இசக்கி பரத், தம்பி ராமய்யா, ஏ.வெங்கடேஷ், நாகேந்திரன், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். மலையும், மலை சார்ந்த பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். கொடைக்கானலில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்து சென்று வெள்ளக்கவி என்ற கிராமத்தில் முக்கிய காட்சிகளை படமாக்கினோம்" என தெரிவித்துள்ளார்.

வாடிவாசல் படத்திற்காக வேற லெவல் ப்ளன்: படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

 


சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் பட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகவுள்ளது.

இந்த படம் தவிர சூர்யா தா.செ.ஞானவேல் இயக்கி வரும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கான தேதிகள் கொடுத்துள்ளாராம் சூர்யா. இதன் படப்பிடிப்பை செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, விடுதலை படத்தை முடிக்க முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். 

இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இளையராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கிறதா சூர்யா 40? தீயாய் பரவும் தகவல்!

 


சூர்யா சூரரை போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.  இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

அரசு தளர்வுகள் அறிவித்து சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளதால்  தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். 

இந்த படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளனர். பாண்டிராஜ் படம் என்பதால் இது கிராமத்து கதையம்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக தகவல் வெளியானது. அதன் படி, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. 

பல இளம் பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி வருவதாகவும் பாலியல் குற்றவாளிகளை தேடிப்பிடித்து தண்டிக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாகவும் தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது. 

ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் வருகிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் உள்ளனர்.

டி.வி.யில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை

 


இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் குண்டாக இருப்பதும், 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேர் குண்டாக உள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, உடல் குண்டாவதற்கு காரணமாக இருக்கும் கடைகளில் வாங்கி சாப்பிடும் பார்சல் உணவுப்பொருட்கள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றின் விளம்பரங்கள் இனி தொலைக்காட்சிகளில் வெளியிடக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பக் கூடாது என இங்கிலாந்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்

 திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதே தவறு என்று நினைக்கும் இன்றைய சூழலில் பல மனைவிகளின் முன் 37வது முறையாக ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது கதையல்ல, நிஜம்…



  • 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்
  • 35 குழந்தைகளும் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்
  • 126 பேரக்குழந்தைகள் புடைசூழ நடைபெற்றது திருமணம்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதே தவறு என்று நினைக்கும் இன்றைய சூழலில் பல மனைவிகளின் முன் 37வது முறையாக ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது கதையல்ல, நிஜம்…

இந்த விநோத திருமணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை, இந்த வீடியோ எந்த நாட்டில் இருந்து பதிவேற்றப்பட்டது என்பதும் சரியாக தெரியவில்லை.  திருமணம் கால்கட்டு என்று தமிழகத்தில் ஒரு செலவாடை உண்டு. ஆனால் 37 முறை திருமணம் செய்துக் கொண்டால் அதற்கு என்ன சொல்வது?

அதிலும் இந்த மனிதர் 28 மனைவிகள் முன்னிலையில், 35 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் புடைசூழ 37 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

பட்டையைக் கிளப்பும் பிரேம்ஜி படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட்லுக்: ஆச்சரியத்தில் கோடம்பாக்கம்

 பிரேம்ஜியின் இதுவரை காணப்படாத ஒரு கடினமான, முரட்டான தோற்றம் பலரது ஆர்வத்தை தூண்டியுள்ளது. அவரது தோற்றத்தைப் போலவே படத்தின் பெயரும் ரசிகர்களையும் பட ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.   

  • வித்தியாசமான தலைப்புடன் வெளிவருகிறது பிரேம்ஜியின் அடுத்த படம்.
  • இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
  • இதில் பிரேம்ஜி ஒரு முரட்டு டானாக காட்சியளிக்கிறார்.

தனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைப்பதிலும், அசத்தலான வசனங்களை எழுதுவதிலும், மக்களை கவரும் வண்ணம் திரைக்கதையை அமைப்பதிலும் வெங்கட் பிரபுவின் பாணி மிகவும் வித்தியாசமானது. அவரது படங்களுக்கென ஒரு தனி வகை ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்களில் இருக்கும் வித்தியாசமான படைப்பாற்றல் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரனும் (Premji Amaran) வித்தியாசமான படைப்பாற்றலில் சளைத்தவர் அல்ல. மிக வித்தியாசமான தலைப்புகளை அள்ளி வீசும் பிரேம்ஜி அவர் நடித்த படங்களில் பல வசனங்களையும் எழுதியுள்ளார். பாடகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல வேடங்களில் அசால்டாக பட்டையைக் கிளப்பும் இவர், இதற்கும் முன்னரும் பல வித புதிய விஷங்களை செய்துள்ளார். எனினும் தற்போது அடுத்து வரவிருக்கும் அவரது படத்தின் தலைப்பு அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.

பிரபலமான திருட்டு திரைப்பட வலைத்தளமான 'தமிழ் ராக்கர்ஸ்' என்பதுதான் பிரேம்ஜியின் அடுத்த படத்தின் பெயராகும்.  அவர் சமூக ஊடகங்களில் (Social Media) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இதில் அவர் ஒரு உள்ளூர் டானை போல காணப்படுகிறார். இதுவரை காணப்படாத வகையில் ஒரு கடினமான, முரட்டான அவரது தோற்றம் பலரது ஆர்வத்தை தூண்டியுள்ளது. அவரது தோற்றத்தைப் போலவே படத்தின் பெயரும் ரசிகர்களையும் பட ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


புதிய களத்தில் இறங்கிய நடிகர் ஆர்யாவின் “மச்சினிச்சி”

 நடிகர் ஆரியா நடிப்பில் உருவான திரைப்படம் கலாபக் காதலன். இப்படம் 2006-ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தின் நாயகி ரேணுகா, நாயகி ஆரியா. இப்படம் சகோதரியின் கணவனை விரும்பும் பெண்ணைப் பற்றியது. இப்படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடித்த்ள்ள அக்‌ஷயா ரோ படம் முழுக்க கோவத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பின் மூலம் ரசிகர்கள் இருந்தார்களோ இல்லையோ பேரை கேட்டாலே கோபத்திற்கு ஆளானார்கள் சிலர்.  


இப்படத்தை தொடர்ந்து இவர் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’, டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகையாக வளம் வந்த இவர் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். நடிகை அக்ஷயா தற்போது ‘யாளி’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அக்‌ஷயாவே நடித்திருக்கிறார். இப்படத்தில் ஊர்வசி, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் அர்ஜுன் என்ற புதுமுக நடிகரை அறிமுகம் செய்துள்ளனர். 

சன்னிலியோன் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதி!!

 நடிகை சன்னிலியோன்னுக்கு படபிடிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுத்துவமனையில் அனுமதித்துள்ளனர்!!


நடிகை சன்னிலியோன்னுக்கு படபிடிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுத்துவமனையில் அனுமதித்துள்ளனர்!!

சன்னி லியோனுக்கு ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

தற்போது இவர் தமிழ் சரித்திர திரைப்படமான வீரமா தேவி என்ற திரைப்படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், சன்னிலியோன் ரியாலிட்டி ஷோ ஒன்றின் படபிடிப்பிற்காக உத்தரகாண்ட் சென்றிருந்தார். அப்போது அவருக்கு அங்கு திடீர் என உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது. 

Rajinikanth: சிறப்பு அனுமதி; தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

 சிறப்பு அனுமதியுடன் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவுள்ள நிலையில் அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதன்படி நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா (Corona Spread) அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவருடன் சேர்ந்து குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். 




பிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை!!

 சென்னை வளசரவாக்கத்தில்பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார்!



சென்னை வளசரவாக்கத்தில்பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார்!

வம்சம் நாடகத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா. இவர் இன்று சென்னையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இவருக்கு கணவருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. 

மேலும் அவருக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

நடிகை டாப்ஸியின் ‘ஹஸீன் தில்ரூபா’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘பிங்க்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார் .

 

கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

 

உலகம் முழுக்க அறிவியலாளர்கள் வியக்கத்தக்க அளவில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாம் இன்னும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

சில முக்கியமான கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. எத்தனை பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது?

இது மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. ஆனால் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று.

உலகம் முழுக்க பல லட்சம் பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையாகத்தான் இது இருக்கும்.

இந்த வைரஸ் பாதிப்பு இருந்தாலும், உடல் நலிவுறவில்லை என்பது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாத எண்ணற்றவர்களைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஒருவருக்கு நோய்ப் பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கான பரிசோதனை முறை உதவியாக இருக்கும்.


2. உண்மையில் இது எந்த அளவுக்கு உயிர்ப்பலி வாங்கக் கூடியது?

எவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நமக்குத் தெரியாத வரையில், மரண விகிதம் பற்றி நிச்சயமாகக் கூறுவது சாத்தியமற்றது. இப்போதைக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 சதவீதம் பேர் மரணம் அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நோய் அறிகுறி தென்படாதவர்கள் அதிகமாக இருந்தால், மரண விகிதம் இன்னும் குறைவாக இருக்கும்.

3. முழுமையான அறிகுறிகளின் பட்டியல் என்ன?

கொரோனா வைரஸ் தாக்குதலின் பிரதான அறிகுறிகளாக - காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் உள்ளன. இவற்றைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.

உலர்ந்த தொண்டை, தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கு பாதிப்புகளும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாசனை அறியும் தன்மை குறையக்கூடும் என்றும்கூட சில அனுமானங்கள் கூறுகின்றன.

ஆனால் லேசான சளி போன்ற அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல் அல்லது தும்மல் ஆகியவை சில நோயாளிகளுக்கு இருப்பதாகச் சொல்வதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.

இதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், வைரஸ் தாக்குதல் இருந்தாலும் தங்களுக்கு தொற்று பரவியுள்ளது என்பதை மக்கள் அறியாமல் இருப்பார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. தொற்று பரவலில் சிறுவர்களின் பங்கு என்ன?

சிறுவர்களுக்கு நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்கும். இருந்தாலும், அவர்களுக்கு லேசான அறிகுறிகள் தோன்றலாம். முதிய வயதினருடன் ஒப்பிடும்போது, குழந்தைகளில் இந்த நோயால் ஏற்படும் மரண விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

ஒரு நோய் பரவுதலுக்கு குழந்தைகள் அதிக காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் நிறைய பேருடன் (பெரும்பாலும் விளையாட்டு மைதானங்களில்) கலந்து பழகும் வாய்ப்பு இருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், இந்த வைரஸ் தாக்குதலைப் பொருத்தவரையில், குழந்தைகள் மூலம் எந்த அளவுக்குப் பரவும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

5. உண்மையில் இது எப்படி தொடங்கியது?

இந்த வைரஸ் 2019 இறுதியில் சீனாவில் வுஹானில் வெளிப்பட்டது. அங்கு இறைச்சி அங்காடியில் நிறைய பேருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக சார்ஸ்-சி.ஓ.வி.-2 என கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், வெளவால்களுக்குத் தொற்றக் கூடிய ஒருவித வைரஸ்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இருந்தபோதிலும், வெளவால்களில் இருந்து வேறொரு விலங்கினத்துக்கு இது பரவி, அதில் இருந்து மனிதர்களுக்குப் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆரம்பம் எது என்பது இன்னும் தெரியவில்லை. வெளவால்களிடம் இருந்து தொற்று பரவிய அந்த விலங்கினம், இதை மேலும் பரப்பும் வாய்ப்பு கொண்டதாகவும் இருக்கலாம்.

6. கோடையில் இந்தப் பாதிப்புகள் குறையுமா?

சளிக்காய்ச்சலும், சளியும் குளிர் மாதங்களில் சாதாரணமாகக் காணப்படும். ஆனால் வெப்பநிலை அதிகமாகும்போது, வைரஸ் பரவும் நிலையில் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.

பருவநிலை மாற்றத்தால் இதில் தாக்கம் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிரிட்டன் அரசின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். அப்படி ஒரு தாக்கம் இருந்தால், சளி மற்றும் சளிக்காய்ச்சல் போன்றவற்றின் மீதான தாக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

கோடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்தால், மீண்டும் குளிர் பருவத்தில் அதன் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. அப்போது வழக்கமான குளிர்பருவ நோய்களால் அதிக நோயாளிகளை மருத்துவமனைகள் கையாண்டு கொண்டிருக்கும் சமயமாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

7. சிலருக்கு ஏன் தீவிரமான அறிகுறிகள் தென்படுகின்றன?

பெரும்பாலானவர்களுக்கு கோவிட் - 19 லேசான அறிகுறிகளை மட்டுமே காட்டுகிறது. இருந்தபோதிலும், 20 சதவீதம் பேர் அதிக தீவிரமான நோய்க்கு ஆட்படுகிறார்கள், காரணம் என்ன?

இதில் ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓரளவுக்கு மரபணு சார்ந்த விஷயமாகவும் அது உள்ளது. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது, தீவிர கவனிப்பு தேவைப்படும் நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்ற, நோயைத் தடுக்க உதவியாக இருக்கும்.

8. நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும், ஒருவருக்கே இரண்டு முறை இது தாக்குமா?

இதுகுறித்து நிறைய அனுமானங்கள் உள்ளன. குறிப்பிட்ட வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும் என்பதற்கு, குறைவான ஆதாரங்களே உள்ளன.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நோயாளி வெற்றிகரமாக போராடி மீண்டுவிட்டார் என்றால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டதாக அர்த்தம். ஆனால் இந்த நோய் சில மாதங்கள் தான் அறியப்பட்டுள்ளது என்பதால், இதன் நீண்டகால பாதிப்பு பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. முதல்நிலையில் நோயுற்று குணமானதாக அறிவிக்கப்பட்டவருக்கு அந்த நிலையில் முறையாக பரிசோதனை செய்யாமல் அனுப்பியதால் தான், மீண்டும் அவர் நோயுறுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நீண்டகால நோக்கில் என்ன நடக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, நோய் எதிர்ப்பாற்றல் குறித்த கேள்விகளுக்கு விடை காண்பது முக்கியமானது.

9. இந்த வைரஸ் நிலைமாற்றம் அடையுமா?

வைரஸ்கள் எப்போதும் நிலைமாற்றம் அடைந்து பெருகிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதன் மரபணு குறியீடுகளில் ஏற்படும் மாற்றங்கள், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்காது.

பொதுவாக, நீண்டகால நோக்கில் வைரஸ்களின் உயிர்க்கொல்லி குணம் குறையும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு உத்தரவாதம் கிடையாது.

வைரஸ் நிலைமாற்றம் அடைந்து பெருகும் நிலை ஏற்பட்டால், நமது நோய் எதிர்ப்பாற்றலால் அதைக் கண்டறிய முடியாமல் போகும், அதற்கான தடுப்பூசி மருந்துகள் வேலை செய்யாமல் போகும் (சளிக் காய்ச்சலில் நடந்தது போல) நிலை ஏற்படும் என்பது தான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

 


நன்றி

 பிபிசி