‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை கார்த்திகா. இதைத் தொடர்ந்து அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்ததார். அதன் பின் சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
நடிகை கார்த்திகா கடைசியாக வா டீல்
படத்தில் நடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம்
சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. அதன்பிறகு அவருக்கு படங்கள்
இல்லை.
இதனால் 2017-ல் ஆரம்ப் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டி.வி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை.
தற்போது
பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும்
ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி
உள்ளது.






