திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதே தவறு என்று நினைக்கும் இன்றைய சூழலில் பல மனைவிகளின் முன் 37வது முறையாக ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது கதையல்ல, நிஜம்…
- 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்
- 35 குழந்தைகளும் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்
- 126 பேரக்குழந்தைகள் புடைசூழ நடைபெற்றது திருமணம்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதே தவறு என்று நினைக்கும் இன்றைய சூழலில் பல மனைவிகளின் முன் 37வது முறையாக ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது கதையல்ல, நிஜம்…
இந்த விநோத திருமணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை, இந்த வீடியோ எந்த நாட்டில் இருந்து பதிவேற்றப்பட்டது என்பதும் சரியாக தெரியவில்லை. திருமணம் கால்கட்டு என்று தமிழகத்தில் ஒரு செலவாடை உண்டு. ஆனால் 37 முறை திருமணம் செய்துக் கொண்டால் அதற்கு என்ன சொல்வது?
அதிலும் இந்த மனிதர் 28 மனைவிகள் முன்னிலையில், 35 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் புடைசூழ 37 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.