இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5
வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் குண்டாக இருப்பதும், 10 வயது
குழந்தைகள் 20 சதவீதம் பேர் குண்டாக உள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து,
உடல் குண்டாவதற்கு காரணமாக இருக்கும் கடைகளில் வாங்கி சாப்பிடும் பார்சல்
உணவுப்பொருட்கள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றின் விளம்பரங்கள் இனி
தொலைக்காட்சிகளில் வெளியிடக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது
போன்ற விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9
மணி வரை 60 சதவீதம் ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விளம்பரங்களை
இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பக் கூடாது என இங்கிலாந்து சுகாதாரத்துறை
உத்தரவிட்டுள்ளது.






